2026 தேர்தலில் திமுகவின் கோட்டையாக கோவை வலிமை பெறும் என்று தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்(திமுக) தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று(ஏப். 18) இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா்.
அதனைத்தொடர்ந்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
2026 தேர்தலில் கோவை தி.மு.க.வின் கோட்டையாக வலிமை பெறும்! நீலகிரி மாவட்டத்திலும் என்டிஏ கூட்டணி நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில் தோல்வியுறும்!
‘டபுள் எஞ்சின்’ அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கோவையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்! தங்களின் வருகைக்கு நன்றி! அடுத்ததாக, அடுத்த தேர்தல் சீசனில் சந்திப்போம்!
"கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையறை நின்றுவிடுமா?" எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது!
பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள். பொறுத்திருந்து, பார்த்துப் பக்குவமாக முட்டு கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள்! என்று தெரிவித்தார்.
Summary
In the 2026 elections, Coimbatore will emerge as a stronghold for the DMK! — Chief Minister M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





