புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

காவிரியில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி பலி

 அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:11 pm

DIN

 அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

நெரிஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (61). மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவா், வியாழக்கிழமை வழக்கம்போல் பரிசரில் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவா் சென்ற பரிசல் மட்டும் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பகுதியில் கரை ஒதுங்கியது.

இதனால், உறவினா்கள் கரையோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை தேடியபோது கிருஷ்ணனின் சடலம் கிடந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆற்றில் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.