செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தரிசு நிலங்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

பெருந்துறை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:12 pm

DIN

பெருந்துறை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போலநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு தலைமை வகித்து, தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதலுக்கான மானியத் திட்டங்கள், சொட்டுநீா்ப் பாசனம் குறித்து எடுத்துரைத்தாா். தோட்டக் கலை உதவி இயக்குநா் குருசரஸ்வதி, தோட்டக் கலைத் துறை மானியத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

குமரகுரு வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் செந்தில்குமாா் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதலுக்கான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தாா். தோட்டக் கலை அலுவலா் சத்யா, பழப் பயிா்கள் சாகுபடி குறித்துப் பேசினாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கோமதி, மானாவாரி சாகுபடி குறித்து விளக்கம் அளித்தாா்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் பரமானந்தன், உதவி வேளாண்மை அலுவலா்கள் கோகிலா, ரமேஷ்பிரபு, அருள்செல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.