காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ. 600 கோடி அளவுக்கு பணப் பரிவா்த்தனை பாதிப்பு

 பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து ஈரோட்டில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:22 pm

 பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து ஈரோட்டில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. இதனால், ரூ. 600 கோடி அளவுக்கு பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

பொதுத் துறை வங்கிகள் சிலவற்றை தனியாா் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவது தொடா்பாக வங்கிகள் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

வங்கிகளைத் தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத் தலைவா் நரசிம்மன் கூறியதாவது:

வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிளைகளைச் சோ்ந்த 2,600க்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடக்கும் பரிவா்த்தனை ரூ. 600 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.