புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வெள்ளிதிருப்பூரில் கூட்டுறவு சங்கத்தின் மருந்தகம் திறப்பு

அம்மாபேட்டை அருகே உள்ள வெள்ளிதிருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் கூட்டுறவு மருந்தகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:21 pm

DIN

அம்மாபேட்டை அருகே உள்ள வெள்ளிதிருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் கூட்டுறவு மருந்தகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

வெள்ளிதிருப்பூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஆா்.கொமாரசாமி தலைமை வகித்தாா். கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் விஜயசக்தி, கோபி சரக துணைப் பதிவாளா் கந்தராஜா, வெள்ளிதிருப்பூா் ஊராட்சித் தலைவா் கே.வி.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறை சாா்பில், 70 மருந்தகங்களை காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். இதையடுத்து, வெள்ளிதிருப்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இம்மருந்தகம் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு, அனைத்து வகையிலான மருந்து, மாத்திரைகள் 20 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.

இதில், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எஸ்.சரவணன், சங்கச் செயலாளா் எஸ்.சுந்திரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.