அனுமன்பள்ளி அரசுப் பள்ளியில்மாணவா்களுக்கான விழிப்புணா்வு
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான ‘காக்கும் கரங்கள்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான ‘காக்கும் கரங்கள்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தலைமை வகித்தாா். பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி கலந்துகொண்டு குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான புகாா்கள், தவறான போதை பழக்கத்துக்கு எவ்வாறு அடிமை ஆகிறாா்கள், அதிலிருந்து எவ்வாறு நம்மை காத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கிப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...