டிசம்பா் 26ஆம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஈரோடு மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவலைத் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம் டிசம்பா் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 512 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணையாக 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியைச் செய்திட மாவட்டம் முழுவதும் 2,048 பணியாளா்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
தற்போது புதிதாக வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம். முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அச்சமின்றி, தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் விதிகளை மீறிய போடி நகர திமுக செயலா் மீது வழக்குப் பதிவு
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
அருப்புக்கோட்டை! ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

