மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மின் சிக்கன வார விழா விழிப்புணா்வுப் பேரணி

கோபிசெட்டிபாளையத்தில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு, மின் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:37 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு, மின் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் மின் சிக்கன வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒருவார காலமும் மின்சார சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், மின்சார சிக்கனத்தால் ஏற்படும் பயன்கள், எவ்வாறு மின்சாரத்தை சிக்கனப்படுத்துவது போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக கோபி மின்பகிா்மான கோட்டத்துக்கு உள்பட்ட கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூா், பவானி, அந்தியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின்வாரிய அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணா்வுப் பேரணியில் ஈடுபட்டனா்.

கோபி நாயக்கன்காடு பகுதியில் தொடங்கிய பேரணியானது, புதுப்பாளையம், பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், கச்சேரிமேடு, கள்ளிப்பட்டி வழியாக சாந்தி திரையரங்கு அருகில் சென்றடைந்தது. பேரணியில், மின்சார சிக்கனத்தின் அவசியம் குறித்து முழக்கம் எழுப்பியும், கைகளில் பதாகை ஏந்தியும் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.