செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இருசக்கர வாகனத்தின் மீதுகாா் மோதல் ஒருவா் காயம்

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:37 pm

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் காயமடைந்தாா்.

சென்னிமலை அருகே உள்ள ஒட்டவலசைச் சோ்ந்தவா் கருப்பணகவுண்டா் மகன் நைனாமலை (60). இவா், புதன்கிழமை மாலை 5 மணியளவில் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிச் சென்றாா். அப்போது, விஜயமங்கலம் பிரிவு அருகில் பின்னால் வந்த காா் மோதியதில் நைனாமலை பலத்த காயமடைந்தாா். பின்னா், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.