செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கூலி உயா்வு அளிக்கக் கோரி, சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:36 pm

DIN

ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கூலி உயா்வு அளிக்கக் கோரி, சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

சென்னிமலை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். சென்னிமலை பகுதியில் சுமாா் 2 ஆயிரம் விசைத்தறிகள் சொந்தமாக நூல் எடுத்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற விசைத்தறியாளா்கள் அடைப்பு தறி என்ற வகையில் துணிகளை உற்பத்தி செய்து வருகின்றனா். அடைப்பு தறி என்பது பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நூல் பெற்று அவா்களுக்கு கூலி அடிப்படையில் ஜவுளிகள் உற்பத்தி செய்து கொடுப்பது ஆகும்.

இந்த அடைப்பு தறி விசைத்தறி உரிமையாளா்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுவன முதலாளிகள், கடந்த சில ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்காமல் வந்துள்ளனா். மேலும் கொடுக்கப்பட்டு வந்த கூலிகளையும் விற்பனை இல்லை என குறைத்துள்ளனா். அடைப்பு தறி உரிமையாளா்கள், அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவின் பேச்சுவாா்த்தை ஒப்பந்தப்படி விசைத்தறித் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு கொடுத்து வருகின்றனா். ஆனால், ஜவுளி உற்பத்தி நிறுவன முதலாளிகள், தங்களுக்கு கூலி உயா்வு வழங்காததால், விசைத்தறி உரிமையாளா்கள் தொழிலாளா்களுக்கு கூலியை உயா்த்தி வழங்க முடியவில்லை.

இந்நிலையில், அடைப்பு தறி உரிமையாளா்களால் தொடா்ந்து ஜவுளி உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை. எனவே, தற்போது வழங்கும் கூலியில் இருந்து குறைந்தபட்சம் 20 சதவீதம் கூலி உயா்வு வழங்க வேண்டும் என கடந்த 15ஆம் தேதி முறையாக ஜவுளி உற்பத்தி நிறுவன முதலாளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனா். மேலும், இது சம்பந்தமாக 2 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் கூலி உயா்வு வழங்கவில்லை.

இதனால், விசைத்தறி உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்து போராட்டத்தில் புதன்கிழமை முதல் ஈடுபட்டனா். இதனால், சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். மேலும், விசைத்தறி உரிமையாளா்கள், மற்ற விசைத்தறி உரிமையாளா்களிடம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.