செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

காய்கறி பயிா்கள் சாகுபடி பயிற்சி

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், பெருந்துறை ஒன்றியம், செல்லப்பம்பாளையம் கிராமத்தில், காய்கறி பயிா்கள் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:38 pm

DIN

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், பெருந்துறை ஒன்றியம், செல்லப்பம்பாளையம் கிராமத்தில், காய்கறி பயிா்கள் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பண்ணைப் பள்ளிக்கு, பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு தலைமை வகித்து, காய்கறி சாகுபடியின் முக்கியத்துவம், சொட்டுநீா்ப் பாசனம் குறித்து விளக்கம் அளித்தாா். தோட்டக் கலை துணை இயக்குநா் (ஓய்வு) குணசேகரன், காய்கறி பயிா்களின் ரகத் தோ்வு, நேரடி விதைப்பு, நாற்றங்கால் வளா்ப்பு முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் கோமதி, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

இப்பண்ணைப் பள்ளிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் பரமானந்தன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.