முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளருமான கே.வி.இராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத்தொடா்ந்து, பன்னீா் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆா் சிலை, ஜெயலலிதா, அண்ணா, பெரியாா் ஈவெரா ஆகியோா் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெருந்துறையில்....
அதிமுக ஈரோடு புகா் கிழக்கு மாவட்டம் பெருந்துறை தொகுதி சாா்பில், குன்னத்தூா் நால்ரோடு பிரிவில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். திருவுருவப் படத்துக்கு கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரம்: நம்பிக்கையில் தாமரை; கலக்கத்தில் இரட்டை இலை!

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை
நான்குனேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பிரசாரம்!
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

