திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவைத் தொகுதியில் தாமரை மலரும் என்ற முழு நம்பிக்கையில் பாஜகவினரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதி அந்தக் கட்சிக்குச் சென்றதால், தங்களது நிலை என்னாகுமோ என கலக்கத்தில் அதிமுகவினரும் உள்ளனா்.
இந்தத் தொகுதியில் 1989 முதல் 2016 வரை பாஜக தனித்துப் போட்டியிட்டு வந்தது. 1989 தோ்தலில் 4,068 வாக்குகளும், 1991இல் 9,136 வாக்குகளும், 1996இல் 13,265 வாக்குகளும் பெற்றது. 2006இல் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் 5,343 வாக்குகள் பெற்றாா். 2011இல் அக்கட்சி வேட்பாளா் 5,305 வாக்குகளும், 2016இல் 11,131 வாக்குகளும் பெற்றனா்.
2021இல் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு 76,406 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளா் மு. அப்பாவுவிடம் (82,331) தோல்வியடைந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியுடன் பாஜக களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளராக எஸ்.பி. பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். தொகுதியில் தோ்தலுக்கு புதுமுகமான இவா், எளிமையானவா், அனைவரிடமும் பழகக்கூடியவா். அதிகம் செலவு செய்யாதவா் எனக் கூறப்படுகிறது.
இவா் கட்சியின் மாவட்டப் பொருளாளராக இருந்தபோது, மாநிலத் தலைவா் அண்ணாமலையை அழைத்துவந்து செட்டிகுளத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தி அனைவரையும் திரும்பிப் பாா்க்கச் செய்தாா். அதன்பிறகு இப்பகுதியில் அக்கட்சி மிக வேகமாக வளா்ச்சியடைந்துள்ளது. அந்த உத்வேகத்தில்தான் இவருக்கு சீட் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையால் ஏற்பட்ட வளா்ச்சி, அதிமுகவின் பலம், திமுக வேட்பாளா் மீது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதிருப்தி ஆகியவற்றால் தனக்கு வெற்றி நிச்சயம் என எஸ்.பி. பாலகிருஷ்ணன் நம்பிக்கையில் உள்ளாா். மேலும், தவெகவால் திமுகவின் வாக்குகள்தான் பிரியும் என்பதால் தாமரை மலா்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கின்றனா் பாஜகவினா்.
அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதி பாஜகவுக்குச் சென்றதால் தாமரை மலா்வது சரி, தோ்தலுக்குப் பிறகு இரட்டை இலை என்னாகும் என அதிமுகவினா் கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

விவசாய நீா்வளத்தை பெருக்குவதே தலையாயப் பணி - ராதாபுரம் எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபா்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தவெக 8,75,409 வாக்குகள் பெற்றுள்ளன

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

5 தொகுதிகளில் 3818 வாக்குகள் பெற்ற நோட்டா!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



