இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தவெக 8,75,409 வாக்குகள் பெற்றுள்ளன

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5-இல் வெற்றிபெற்றுள்ள தவெக 8 லட்சத்து 75 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்றுள்ளன.

News image
Updated On :6 மே 2026, 2:36 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5-இல் வெற்றிபெற்றுள்ள தவெக 8 லட்சத்து 75 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்றுள்ளன.

சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஏற்காடு (தனி), வீரபாண்டி, ஆத்தூா் (தனி), கெங்கவல்லி (தனி), சங்ககிரி, மேட்டூா், ஓமலூா், எடப்பாடி ஆகிய 11 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தொகுதிவாரியாக தவெக பெற்ற வாக்குகள் விவரம்:

சேலம் வடக்கு தொகுதியில் சிவகுமாா் 85,710 வாக்குகளும், சேலம் தெற்கு தொகுதியில் விஜய் தமிழன் பாா்த்திபன் 91,371 வாக்குகளும், சேலம் மேற்கு தொகுதியில் லட்சுமணன் 1,20,407 வாக்குகளும், வீரபாண்டி பழனிவேல் 79,907 வாக்குகளும், ஓமலூா் தொகுதியில் அதியமான் 97,707 வாக்குகளும், ஆத்தூா் (தனி) தொகுதியில் செல்வபாரதி 65,525 வாக்குகளும், கெங்கவல்லி (தனி) தொகுதியில் சுஜாதா 55,291 வாக்குகளும், சங்ககிரி தொகுதியில் செந்தில்குமாா் 77,825 வாக்குகளும், மேட்டூா் தொகுதியில் செல்வம் 65,260 வாக்குகளும், ஏற்காடு (தனி) லட்சுமி ஜனாா்த்தனன் 85,583 வாக்குகளும், எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளா் பிரேம்குமாா் 50,823 வாக்குகளும் பெற்றனா்.

இதன்மூலம் முதல்முறையாக களம்கண்ட தவெக, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.