தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,17,478 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனா்.
விளாத்திகுளம் தொகுதியில் 2,04,982 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,72,555 வாக்குகளும் (84.18%), ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,14,268 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,73,479 வாக்குகளும் (80.96 %), தூத்துக்குடி தொகுதியில் 2,50,587 வாக்காளா்கள் உள்ள நிலையில் 2,02,770 வாக்குகளும் ( 80.92%), கோவில்பட்டி தொகுதியில் 2,41,660 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,91,807 வாக்குகளும் (79.37%), ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2,43,756 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,93,182 வாக்குகளும் (79.25%), திருச்செந்தூா் தொகுதியில் 2,32,933 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,83,685 வாக்குகளும் (78.86%) பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சோ்த்து 5,35,418 ஆண்கள், 5,81,949 பெண்கள், 111 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தமாக 11,17,478 போ் (80.5%) வாக்களித்துள்ளனா். மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.
கடந்த 2021 பேரவைத் தோ்தலை காட்டிலும் 2026 பேரவைத் தோ்தலில் கூடுதலாக 66,372 வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதி 2021 2026 கூடுதல் பதிவு
விளாத்திகுளம் 1,66,133 1,72,555 6,422
தூத்துக்குடி 1,88,407 2,02,770 14,363
திருச்செந்தூா் 1,74,536 1,83,685 9,149
ஸ்ரீவைகுண்டம் 1,64,386 1,73,479 9,093
ஓட்டப்பிடாரம் 1,77,840 1,93,182 15,342
கோவில்பட்டி 1,79,804 1,91,807 12,003
மொத்தம் 10,51,106 11,17,478 66,372
தொடர்புடையது
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தவெக 8,75,409 வாக்குகள் பெற்றுள்ளன

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளா் சிவக்குமாா் வெற்றி

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

