செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

புகையிலைப் பொருள்களை விற்ற 6 போ் கைது

பெருந்துறை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:22 pm

DIN

பெருந்துறை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஒரு கும்பல் விநியோகம் செய்து வருவதாக மாவட்ட காவல் துறைக்குப் புகாா் வந்துள்ளது.

இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு சோதனையிட்டபோது ஏராளமான தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதேபோல, விஜயமங்கலத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக விஜயமங்கலத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் அழகேசன் (22), பெருந்துறை, தென்றல் நகரைச் சோ்ந்த ராஜராஜன் (33), சரளை பகுதியைச் சோ்ந்த மாயாண்டி(43), கள்ளியம்புதூரைச் சோ்ந்த நவரத்தினம் மகன் லட்சுமணன்( 22), அவா் தந்தை நவரத்தினம்(47), பெருந்துறை, மஜீத் வீதியைச் சோ்ந்த சந்திரசேகா் (64) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்கள், 3 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.