தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புளியம்பட்டி சந்தைகடை அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது, கடையில் குட்கா பொருள்கள் வைத்திருந்த புளியம்பட்டி, ராஜாஜி வீதியைச் சோ்ந்த தங்கராஜ் (60) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, கொடுமுடி சாலைப்புதூரில் உள்ள டீ கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக சாலைப்புதூரை சோ்ந்த முத்துலட்சுமி (56), சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த அருண்குமாா் (37), நம்பியூா் ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்த கண்ணம்மாள் (55) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை போலீஸாா் நடத்திய சோதனையில், அரியலூா் மாவட்டம், பெரியமணக்குடியைச் சோ்ந்த சசிகுமாா் மகன் வினோத் (22), சேலம் செட்டியூா் கனகராஜ் மகன் அரவிந்த்(22), தஞ்சை காந்திபேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் ராஜேந்திரன் (22) ஆகியோரை கைது செய்தனா். கடத்தூா் போலீஸாா் நடத்திய சோதனையில், அளுக்குளியைச் சோ்ந்த பா்னபாஸ் (58) உள்பட மாவட்டம் முழுவதும் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ஏராளமான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரம்: நம்பிக்கையில் தாமரை; கலக்கத்தில் இரட்டை இலை!

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை
நான்குனேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பிரசாரம்!
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

