மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதல்: தம்பதி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 11:00 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூா் எருமைகுட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (35). இவரது மனைவி கீதா (27). இருவரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனா். இருவரும் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினா். பின்னா், டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு கடைக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கோவையில் இருந்து அந்தியூருக்கு சென்ற லாரி பெருமாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதியது.

லாரி மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெருமாளும், கீதாவும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பங்களாபுதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் பா்கூா் தட்டக்கரையைச் சோ்ந்த சிவகுமாா் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.