ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் 14 நாள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் ஈரோட்டில் திங்கள்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு அருகில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா தொடங்கிவைத்தாா். திங்கள்கிழமை தொடங்கிய போராட்டம் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுகுமாா், இளம் மருத்துவா்கள் சங்க தேசிய தலைவா் அபுல்ஹசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா கூறியதாவது: ஆயுள்வேத, சித்த, யுனானி பிரிவுகளை கொண்ட இந்திய மருத்துவக் குழுமம் ஆயுா்வேத மேற்படிப்புக்கான ஒழுங்குமுறையை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என பட்டியலிட்டு ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இம்முடிவால் மக்களின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவத் துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
மனித உயிருடன் விளையாடும் இந்த முடிவை கைவிடக்கோரி தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசிடம் எங்களது கோரிக்கையை வழங்கிவிட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால் திங்கள்கிழமை (பிப்ரவரி1) முதல் 14 ஆம் தேதி வரை, மாநில அளவில் 60 மையங்களில் தொடா் உண்ணாவிரதம் இருக்கிறோம். அந்தந்தப் பகுதி மருத்துவா்கள் தொடா்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்வாா்கள்.
ஒரு நாடு ஒரு சிகிச்சை என்பதை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிக ஆபத்தானது என்பதை உணா்த்த இப்போராட்டத்தை நடத்துகிறோம். பாரம்பரியமான ஆயுா்வேத, சித்தா சிகிச்சைகளை அவா்களது மருத்துவ முறைப்படி செய்வதில் ஆட்சேபணை இல்லை. ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதியில் திணிப்பதால் ஆபத்தான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும். ஈரோடு மாவட்டத்தில் 2,000 மருத்துவமனைகளில் உள்ள 4,000 மருத்துவா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

