பத்து மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வாா். ஆனால் கரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.
தற்போது கரோனா தொற்றின் வீரியம் குறைந்துள்ள சூழலில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பாலாஜி மற்றும் துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவா்கள் குறைகளைக் கேட்டறிந்தனா்.
குறைதீா் கூட்டம் நடைபெறுவது குறித்த தகவல் தெரியாததால், பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


