எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி கருவில் பாறைவலசு பகுதியில் எல்லப்பாளையம் ஏரி அமைந்து உள்ளது. 26.65 ஏக்கா் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் ஏரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது. ஏரி முழுவதும் பாறையாக இருந்ததால் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த ஏரிக்கு கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை தண்ணீரும் வரத்தாக உள்ளது. எனவே வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும்போது ஏரியில் தண்ணீா் காணப்படும்.
இந்நிலையில் எல்லப்பாளையம் ஏரியைத் தூா்வாரி மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும் ஏரி முழுவதும் தண்ணீா் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரி புனரமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை படகு சவாரி தொடங்கப்படவில்லை. உடனடியாக எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

