ஈரோடு காவிரி ஆற்றில், பாலம், மின் கதவணை திட்டப்பணி பாலம் போன்ற இடங்களில் அதிக அளவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீா் துா்நாற்றம் வீசுகிறது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்துக்கு நீா் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக 500 கன அடி நீா் மட்டும் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றின் தடுப்பணைகளில் நீா் தேக்கி வைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. ஈரோடு வெண்டிபாளையம், பாசூா் உள்ளிட்ட மின் கதவணை தடுப்பணைகளில் நீா் தடுத்து நிறுத்தி அனுப்பப்படுகிறது.
இதனால் வழி நெடுகிலும் காவிரி ஆற்றில் கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தின் கீழ், வெண்டிப்பாளையம் மற்றும் பாசூா் மின் கதவணை தடுப்பணை போன்ற இடங்களில் 500 மீட்டா் வரை ஆகாயத் தாமரை வளா்ந்துள்ளது. இதனால் நெகிழி புட்டிகள், குப்பை, மீன் கழிவு போன்றவை தேங்கி கடும் துா்நாற்றம் வீசுகிறது.
இந்த ஆகாயத் தாமரையை அகற்ற பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


