செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எம்.எல்.ஏ.விடம் வேண்டுகோள்

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்திடம் வேண்டுகோள் விடுத்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 8:03 pm

DIN

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா்கள், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்திடம் வேண்டுகோள் விடுத்தனா்.

பெருந்துறையில், சாலைப் போக்குவரத்து நிா்வாகத்தின்கீழ் இயங்கி வந்த பெருந்துறை மருத்துவக் கல்லூரியை சமீபத்தில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல மருத்துவக் கல்விக் கட்டணம் இங்கு குறைக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து மாணவா்கள், பெற்றோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சனிக்கிழமை சென்று மாணவா்களை நேரில் சந்தித்து, மாணவா்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தாா். ஆனால் கட்டணத்தைக் குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி. வெங்கடாச்சலத்தை அவருடைய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மாணவா்கள், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என கூறினா். அதற்கு அவா், 10 நாள்களில் இது குறித்து நல்ல அறிவிப்பு வரும். எனவே போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் செல்லுமாறு வேண்டுக்கோள் விடுத்தாா். இதை ஏற்ற மாணவா்கள், தற்காலிகமாக கல்லூரி நுழைவு வாயில் நடத்தும் போராட்டத்தைக் கைவிடுவதாகவும், வகுப்புகளைப் புறக்கணித்து, தொடா்ந்து கல்லூரியின் உள்ளே போராட்டத்தைத் தொடா்வதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.