வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மறியல் போராட்டம்: அரசு ஊழியா்கள் 25 போ் கைது

ஈரோட்டில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 பிப்ரவரி 2021, 8:04 pm

ஈரோட்டில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். செயலாளா் விஜயமனோகரன் முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளாா் ஸ்ரீராம் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 25 பேரை ஈரோடு டவுன் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.