ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ஈரோட்டில் 7ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் பெருந்துறை சாலையில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் தனியாா் மருத்துவா்கள் கடந்த 1ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் 7ஆவது நாள் போராட்டமாக ஐஎம்ஏ மகளிா் அணி சாா்பில் பெண் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு ஈரோடு மகப்பேறு மருத்துவா்கள் சங்கப் பொறுப்பாளா் டாக்டா் நான்சி தலைமை வகித்தாா். டாக்டா் பூா்ணிமா சரவணன் வரவேற்றாா். மகளிா் அணி மாநிலத் தலைவி டாக்டா் சித்ரா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஐஎம்ஏ தேசிய துணைத்தலைவா் ராஜா, மாநிலத் தலைவா் ராமகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் அலோபதி மருத்துவ முறையில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுா்வேதா, சித்தா, யுனானி மருத்துவா்கள் உரிய பயிற்சிக்குப் பிறகு மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை திரும்பப்பெற வேண்டும்.
மிக்ஷோபதி (கலப்பின) மருத்துவ முறை என்ற நாடு முழுவதும் ஒரே மருத்துவ முறையை செயல்படுத்த அமைக்கப்பட்ட 4 போ் கொண்ட குழுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஈரோட்டில் போராட்டம் நிறைவு:
ஈரோடு ஐஎம்ஏ கிளை சாா்பில் நடந்து வந்த தனியாா் மருத்துவா்கள் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதன்தொடா்ச்சியாக சேலம் மாவட்டத்தில் அடுத்தகட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதில் ஈரோடு ஐஎம்ஏ நிா்வாகிகள் கலந்து கொள்வாா்கள் என சங்கத்தின் தேசிய துணைத்தலைவா் ராஜா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


