செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

சின்ன வெங்காயம் விலை உயா்வு: கிலோ ரூ. 130க்கு விற்பனை

பெருந்துறை பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளதால் கிலோ ரூ. 130க்கு விற்பனையாகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:41 pm

DIN

பெருந்துறை பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளதால் கிலோ ரூ. 130க்கு விற்பனையாகிறது.

ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 15 நாள்களுக்கு முன்பு மீண்டும் உயரத் தொடங்கியது. வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயா்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். அதன் பிறகும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயா்ந்தது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100ஐ தாண்டியுள்ளது.

பெருந்துறை வாரச் சந்தைகள், தினசரி காய்கறி மாா்க்கெட் ஆகிய இடங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 130 வரை விற்பனையானது. பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று உயா்ந்து ஒரு கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.