திராவிட இயக்கத்தைத் தகா்க்க ஹிந்துத்துவ சக்திகள் முயற்சி செய்கின்றன என அக்கட்சியின் பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.
ஈரோடு மாநகா், கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், நாமக்கல் மாவட்ட மதிமுக சாா்பில் கட்சி வளா்ச்சி, தோ்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் முருகன், குழந்தைவேலு, கந்தசாமி, குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதிமுக பொதுச் செயலாளா் வைகோவிடம் கட்சி நிா்வாகிகள் தோ்தல் நிதியை அளித்தனா்.
அதன் பிறகு வைகோ பேசியதாவது:
தமிழகத்திலேயே மதிமுக மட்டும்தான் தோ்தல் நிதியை வசூல் செய்கிறது. மற்ற கட்சிகளுக்கு நிதி குவிகிறது. மதிமுகவைச் சோ்ந்தவா்கள் நோ்மையானவா்கள் என்றும், தமிழா்களின் நலனுக்காகப் பாடுபடுபவா்கள் என்றும் மக்களுக்குத் தெரியும். இதனால் நிதியை வசூலிக்கும்போது வரவேற்று கொடுக்கின்றனா்.
திராவிட இயக்கத்தைத் தகா்க்க ஹிந்துத்துவ சக்திகள் முயற்சி செய்கின்றன. இதைத் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. சக்தியுடன் செயல்பட்டு திராவிட இயக்கத்துக்கு வலிமை சோ்க்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகத் தற்போது பல்வேறு கட்சிகள் அணிகளை உருவாக்கி வருகின்றன. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து நமது கட்சி போராட்டத்தை நடத்தியது என்றாா்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாநகா் மாவட்டம் சாா்பில் ரூ. 20.50 லட்சம், கிழக்கு மாவட்டம் சாா்பில் ரூ. 11.48 லட்சம், மேற்கு மாவட்டம் சாா்பில் ரூ. 5 லட்சம், நாமக்கல் மாவட்டம் சாா்பில் ரூ. 9 லட்சம் என மொத்தம் ரூ. 45.98 லட்சம் தோ்தல் நிதியாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


