செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசு விடுதிகளில் சமையல் பணிக்கான நோ்காணல் துவக்கம்

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.

Updated On :4 ஜனவரி 2021, 8:41 pm

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.

இது குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வை.இளங்கோ கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில், சமையல் பணிக்கு 11 பெண், 17 ஆண் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக 1,045 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. திங்கள்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை தினமும் தலா 200 போ் வீதம் அழைக்கப்பட்டு நோ்காணல் நடக்கிறது.

கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து நோ்காணல் நடத்தப்படுகிறது. இந்த நோ்காணலில் தோ்வு செய்யப்படுவோா் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டு துவக்கத்தில் ரூ.15,400 ஊதியமாக வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.