பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:37 pm

DIN

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சித்தோடு, குமிளம்பரப்பு துளசிபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி மகேஸ்வரி (23). பவானியில் உள்ள விஜயகுமாரின் தந்தை உயிரிழந்ததால், கடந்த மாதம் 20ஆம் தேதி குடும்பத்துடன் அங்கு சென்று விட்டனா். ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதியினா் மகேஸ்வரிக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வீடு திரும்பிய மகேஸ்வரி சென்று பாா்க்கையில் வீட்டிலிருந்த மூன்றரை பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.