அந்தியூரில் ரூ.1.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.


அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்கு, விற்பனைக்கு வந்த 7,636 தேங்காய்களில் சிறியவை ரூ.6.10 முதல் பெரியவை ரூ.17 வரையில் ரூ.79,110க்கு ஏலம் போனது. 5 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 50.82 முதல் ரூ.110.96 வரையில் ரூ.6,869க்கும், 7 மூட்டைகள் எள், கிலோ ரூ.54.69 முதல் ரூ.84.29 வரையில் ரூ.28,702க்கும், 45 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ.14.09 முதல் ரூ.14.29 வரையில் ரூ.51,450க்கும், 3 மூட்டைகள் துவரை, கிலோ ரூ.47.69 முதல் ரூ.51.09 வரையில் ரூ.14,436க்கும் ஏலம் போனது.
மொத்தம் 60 மூட்டைகளில் 95.01 குவிண்டால் விளைபொருள்கள் ரூ.1,80,588க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...