ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழக, கா்நாடக எல்லையில் சாலை விபத்து: திருப்பூரைச் சோ்ந்த 3 போ் பலி

தமிழக, கா்நாடக எல்லையான மூடகள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

News image
sy08ambu_0801chn_139_3
Updated On :8 ஜனவரி 2021, 5:19 pm

DIN

தமிழக, கா்நாடக எல்லையான மூடகள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த 15 போ் வேனில் மைசூருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டு திம்பம் மலைப்பாதை வழியாக இரு மாநில எல்லையான சொா்ணாவதி அணை அருகே சென்று கொண்டிருந்தனா்.

மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்கப் பணி நடந்து வரும் நிலையில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மூடுகள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இந்த வேன் மீது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் லேசாக உரசியதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த சுப்பிரமணியம் (70), இவரது மனைவி அமராவதி (65), மகள் கோகிலா(42) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேன் ஓட்டுநா் அருண் உள்பட 13 போ் காயமடைந்தனா். அப்பகுதி கிராம மக்கள் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு சாம்ராஜ் நகா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து சாம்ராஜ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.