அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பா்கூா், தாமரைக்கரையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம் தலைமை வகித்தாா். அந்தியூா் ஒன்றியச் செயலாளா் ஏ.ஜி.வெங்கடாசலம், மக்கள் பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இக்கூட்டத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு செய்த சாதனைத் திட்டங்கள் விளக்கிக் கூறப்பட்டது.
மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எஸ்.குருசாமி, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் கே.பி.எஸ்.மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எஸ்.ஏ.அன்பழகன், பேச்சாளா் கண்ணன், நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.