இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ. 1.15 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:45 am

DIN

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு விற்பனைக்கு வந்த 3,251 தேங்காய்களில் சிறியவை ரூ. 6.10 முதல் பெரியவை ரூ. 20 வரையில் என ரூ. 29,424க்கும், 5 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 100.10 முதல் ரூ. 132.60 வரையில் என ரூ. 5,110க்கும், 4 மூட்டைகள் எள் கிலோ ரூ. 75.89 முதல் ரூ. 93.18 வரையில் என ரூ. 9,464க்கும், 13 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 13.45 முதல் ரூ. 17.90 வரையில் என ரூ. 8,578க்கும், 77 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 13.29 முதல் ரூ. 14.09 வரையில் என ரூ. 62,980க்கும் ஏலம் போனது. மொத்தம் 99 மூட்டைகளில் 80.30 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 1,15,556க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.