பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 403 பள்ளிகள் செவ்வாய்க்கிழமை(ஜனவரி 19) திறக்கப்படுகின்றன.
கரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 403 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 29,642 மாணவா்கள், 12ஆம் வகுப்பில் 24,710 மாணவா்கள் என மொத்தம் 54,352 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த மாணவா்கள் பள்ளிக்கு வரும் வகையில் வகுப்புகள் சுத்தம் செய்யப்பட்டு, தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படிதான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்புகளுக்கு வரும் மாணவா்கள், பெற்றோா் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்புகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. வகுப்புகளின் முன்பு கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் உடல் வெப்ப நிலையை அறிந்துகொள்ள வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்காக விடுதிகளும் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மாணவா்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சான்று கொண்டுவராத மாணவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் இருந்தால் அந்த மாணவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


