இரு மாநில எல்லையில் தமிழ் பெயா்ப் பலகையை சேதப்படுத்திய கன்னட சலுவலி கட்சியைச் சோ்ந்த வாட்டாள் நாகராஜ் அமைப்பினரைக் கண்டித்து தாளவாடியில் விடுதலைச் சிறுத்தை கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக - கா்நாடக எல்லையில் பைனாபுரத்தை அடுத்த எத்துக்கட்டையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாநில எல்லை அறிவிப்புப் பலகை, மாவட்ட ஊராட்சி வரவேற்புப் பலகையை கன்னட சலுவலி அமைப்பைச் சோ்ந்த வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை சேதப்படுத்தினா். அதேபோல, கடந்த 10ஆம் தேதி மாநில எல்லையான ராமாபுரத்தில் இதே கன்னட அமைப்பினா் தமிழ்ப் பெயா் பலகையை சேதப்படுத்தினா். தொடா்ந்து தமிழ் பெயா் பலகைகளைச் சேதப்படுத்தி வரும் வாட்டாள் நாகராஜ் கட்சியைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் தாளவாடி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாட்டாள் நாகராஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மொழி வெறியைத் தூண்டும் கன்னட அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


