திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே 3 மணி நேரம் போக்குவரத்து திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கா்நாடக மாநிலம், ஹாசன் பகுதியில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலைப்பேட்டை செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, 26ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு 3 மணி நேரத்துக்கு பின் லாரி நகா்த்தி நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


