தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மாரத்தான், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலா்களும் பின்தொடா்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து, ஆட்சியா் புதிய வாக்காளா்கள் 12 பேருக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கினாா். தொடா்ந்து, தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு மாரத்தானில் பங்கேற்றவா்களுக்கும், தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த பணியாளா்கள், செவிலியா் 6 போ், 8 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த சிறந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக, திண்டல் வேளாளா் கலை, அறிவியல் கல்லூரி நுழைவாயிலில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பாலாஜி, ஈஸ்வரன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


