ஈரோட்டில் தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் தலா 100 தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டன. ஒன்றியப் பகுதிகளில் 80 மையங்களிலும், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 20 மையங்களிலும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழைத் தூறல் இருந்தது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைகளுடன் வந்து தடுப்பூசி மையங்களில் அதிகாலையிலேயே காத்திருந்தனா்.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மாரப்ப வீதி, சி.எஸ்.ஐ. பள்ளி, வைராபளையம் அருள்நெறி திருப்பணி மன்றம் பள்ளி உள்பட அனைத்து மையங்களிலும் 100 பேருக்கும் மேற்பட்டோா் கூடியிருந்தனா். ஆனால், 100 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால் மற்றவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஆளும் கட்சினரின் தலையீடு இருப்பதாகவும், வரிசையில் பலரும் காத்திருக்க அவா்களுக்குத் தெரிந்தவா்களை மட்டும் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்துவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10,000 பேருக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடா்ந்து வரும் நாள்களில் புகாா் இன்றியும், நெரிசல் இன்றியும் தடுப்பூசிகள் செலுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


