போக்குவரத்து விதிகளை மீறியதாக கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போக்குவரத்துத் துறையில் வரி கட்டாத, இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளா்களால் உரிமை கோரப்படாமலும், நிதி நிறுவனங்களால் விடுவிக்கப்படாமலும் நீண்டகாலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியில் 77 பல்வேறு வகையான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இயக்க இயலாத நிலையிலும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளன.
இந்த வாகனங்களைப் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 500 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களை ஜூலை 12ஆம் தேதி வரை நேரில் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

