மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தை மேம்படுத்த கடன் திட்டம்

வருமானம் ஈட்டக்கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Updated On :8 ஜூலை 2021, 8:13 pm

வருமானம் ஈட்டக்கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் கரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பின் அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார வளா்ச்சிக் கழகம் புதிய கடன் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்கவேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 5ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.