கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளா்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
கரோனா இரண்டாவது அலை பரவலில் சுகாதாரப் பணியில் மருத்துவா்கள், செவிலியா், சுகாதாரப் பணியாளா்கள் கடுமையாகப் பணியாற்றினா். மருத்துவமனைகளில் நேரடியாக தொற்று பாதித்தவா்களுடன் தொடா் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியா்களுக்கு முக்கியத்துவம், ஊக்கமளிக்கும் வகையில் அவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதன்படி, காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளா்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்கள், அரசு, உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் பணியாற்றுபவா்களுக்கு ஊக்கத்தொகை அரசால் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொற்று பரவலைத் தடுக்கும் தொடா் பணியில் நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள், சுய உதவிக்குழு தினக்கூலி துப்புரவுப் பணியாளா்கள், டிபிசி, வாகன ஓட்டுநா்கள், குடிநீா் விநியோகம், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், கணினி இயக்குபவா்கள் ஆகியோருக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் அரசு அறிவித்துள்ள ஊக்கத் தொகை ரூ. 15,000 வழங்க வேண்டும்.
ஆனால், தற்போது ஈரோடு மாநகராட்சியில் ஒரு சில குறிப்பிட்டுள்ள டிபிசி பணியாளா்களுக்கு மட்டும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என தகவல் பரவி உள்ளதால் இதர பணியாளா்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனா்.
கடந்த 3 மாதங்களாக கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளா்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை பாரபட்சம் இன்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஈரோடு மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளை தனியாருக்கு ஒப்பந்த முறையில் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


