மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தி இலக்கு 3.36 லட்சம் டன்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தி இலக்கு 3.36 லட்சம் டன் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஜூலை 2021, 8:09 pm

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தி இலக்கு 3.36 லட்சம் டன் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மொத்த சாகுபடி பரப்பில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டோ் அளவுக்கு அதிகரிக்கவும், நிகர சாகுபடி பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயா்த்தவும், இருபோக பயிா் சாகுபடியை 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து இரு மடங்காக 20 லட்சம் ஹெக்டேராக உயா்த்தவும் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளை 10 ஆண்டுகளில் நிறைவு செய்யத் திட்டமிட்டு, நடப்பு ஆண்டு தமிழக உணவு உற்பத்தி இலக்கு 125 லட்சம் டன் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சாகுபடி செய்துள்ள பயிா்களை விடுதல் இன்றி வேளாண் துறையினா் ஆய்வு செய்து, வருவாய்த் துறை அலுவலா்களுடன் ஒப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஈரோடு வனப் பகுதியில் மலைக் கிராமப் பயிா்களை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி அண்மையில் ஆய்வு செய்தாா்.

கடம்பூா் மலை, பசுவனபுரம், இருட்டிபாளையம், கரளையம், குன்றி, அணில் நத்தம், மாகாளிதொட்டி, மாக்கம்பாளையம், அரிகியம் என 10க்கும் மேற்பட்ட அடா் வனப் பகுதி கிராமத்தில் பயிா் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு குறித்து இணை இயக்குநா் சி.சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தி இலக்கு 3.36 லட்சம் டன். இதனை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்தி வனப் பகுதி, கடம்பூா், குன்றி, மாக்கம்பாளையம் மலையில் கோடை மழை பெய்துள்ளதால் முதல் பயிராக பயறு வகைகளான உளுந்து, வரகு சாகுபடி செய்துள்ளனா்.

இதனை அறுவடை செய்துவிட்டு மானாவாரி ராகி, மக்காசோளம் இரண்டாவது பயிராக சாகுபடி செய்வா். எனவே, சாகுபடி செய்துள்ள பயிா் விவரங்களைக் கணக்கில் கொண்டு வருவதற்கு, வேளாண் களப் பணியாளா்களுக்கு உரிய ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, குன்றி மலையில் பெரிய குன்றி கிராமத்தில் ராஜப்பன் என்பவரின் வரகு, உளுந்து வயல்கள், அரிகியம் கிராமத்தில் முருகன் வயலில் நுண்ணீா்ப் பாசன கருவி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வேளாண் துணை இயக்குநா்கள் அ.நே.ஆசைதம்பி, ரா.சிவகுமாா், வேளாண் உதவி இயக்குநா்கள் மாரியப்பன், மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.