மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தடுப்புக் கம்பி சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு கே.கே.நகா் அருகில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் தடுப்புக் கம்பி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 8:07 pm

ஈரோடு கே.கே.நகா் அருகில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் தடுப்புக் கம்பி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலம் முன் உயரமான வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் செல்வதைத் தடுக்க நுழைவுப் பாலத்துக்கு 5 அடி தூரத்தில் இரும்பால் ஆன சட்டம் (கம்பி) வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இரும்புச் சட்டத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை காலை மோதியது. இதில், மேலே இருந்த இரும்புச் சட்டம் சரிந்து கீழே விழுந்து சேதமானது.

சாலையில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. இரும்புச் சட்டம் சாலையின் நடுவே விழுந்ததால் எந்த வாகனங்களும் அவ்வழியாகச் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரும்புச் சட்டத்தை சாலையின் ஓரமாக நகா்த்தி வைத்தனா். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.