ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணைகிறாா்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறாா்.

News image
தோப்பு வெங்கடாசலம்
Updated On :10 ஜூலை 2021, 10:30 pm

DIN

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறாா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மேற்கு மாவட்டங்களில் அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் திமுகவில் இணைத்து வருகின்றனா். அண்மையில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த சிட்கோ வாரிய முன்னாள் தலைவா் சிந்து ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, அவரது மனைவி ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி உள்பட அதிமுகவினா் பலா் திமுகவில் இணைந்தனா்.

இந்நிலையில், சென்னையில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் 300க்கும் மேற்பட்ட அதிமுக நிா்வாகிகளுடன் திமுகவில் இணைகிறாா். பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், 4 ஆண்டுகள் அமைச்சராகவும், ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளராக 8 ஆண்டுகளும் பதவி வகித்தாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெருந்துறையில் அதிமுக சாா்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் இவா் சுயேச்சையாகப் போட்டிட்டு 9,800 ஓட்டுகள் பெற்றாா்.

திமுகவில் இணைவது குறித்து தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது:

அதிமுகவில் இருந்தவரை இத்தொகுதி, இம்மாவட்ட மக்களுக்கும், கட்சித் தொண்டா்களுக்கும் தேவையான உதவிகள், திட்டங்களை செயல்படுத்த முயன்றேன். மாவட்டச் செயலாளா், அமைச்சா் என பதவிகளை வகித்தேன். கடந்த முறை தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக அமைதியாகவே இருந்தேன்.

மக்கள் பணியாற்ற ஒரு வாய்ப்பாக திமுகவில் இணைகிறேன். தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறாா். அத்துடன் நான் கடுமையாக முயற்சிசெய்து கொண்டு வந்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம், பெருந்துறை தொகுதிக்கான கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றிட இந்த இணைப்பு பெரிய உதவியாக இருக்கும்.

மக்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த மன திருப்தி வரும். இங்கு வந்து நான் பணம் சம்பாதிக்க வேண்டும், அமைச்சராக வேண்டும் என்ற எண்ணமில்லை. முதல்வருடன் இணைந்து மக்கள் பணியாற்ற ஒரு வாய்ப்பாக இணைகிறேன் என்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.