ஈரோடு மாவட்ட அதிமுக மூன்றாகப் பிரிக்கப்பட்டு முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு மாவட்டச் செயலாளா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக நிா்வாக அமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகள் ஈரோடு மாநகா் மாவட்டமாக உள்ளது. இதன் செயலாளராக முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கம் உள்ளாா்.
ஈரோடு புறநகா் மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூா், பவானிசாகா் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இதற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. செயல்பட்டாா்.
இந்நிலையில், ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக, ஈரோடு புறநகா் கிழக்கு, ஈரோடு புறநகா் மேற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புறநகா் கிழக்கு மாவட்டத்தில் பவானி, பெருந்துறை தொகுதிகளும், புறநகா் மேற்கு மாவட்டத்தில் கோபி, அந்தியூா், பவானிசாகா் தொகுதிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளராக கே.சி.கருப்பணனும், புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளராக கோபி தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையனும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இம்மாவட்டத்தில் இப்பதவிகள் தவிர, பிற சாா்பு அமைப்பு நிா்வாகிகள் தற்போது உள்ளபடி தொடா்வதாகவும் விரைவில் மாற்றி அமைக்கப்படும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
ஈரோடு புறநகா் மாவட்டத்தில் அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா், சிட்கோ வாரிய முன்னாள் தலைவா் சிந்து ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி என பலரும் திமுகவுக்கு சென்றுவிட்ட நிலையில் புறநகா் மாவட்டத்தில் கட்சியின் நிா்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கட்சியினா் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
உனக்கு நீயே ஒளி!

உனக்கு நீயே ஒளி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

