/

அந்தியூரில் ரூ. 2.67 கோடிக்குவிளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.67 கோடிக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:45 am

DIN

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.67 கோடிக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 10,122 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். கிலோ ரூ. 66.19 முதல் ரூ. 76.19 வரையில் ஏலம் போயின. மொத்தம் 3736.99 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ. 2,65,58,785க்கு விற்பனையாயின.

94 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 55.19 முதல் ரூ. 65.39 வரையில் என ரூ. 1,96,942க்கு ஏலம் போயின. மொத்தம் 10,216 மூட்டைகள் 3769.89 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 2,67,55,727க்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.