பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அடுக்குமாடி குடியிருப்பு கட்டடப் பணி:எம்.எல்.ஏ. ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:54 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி பகுதியில் அரசு குடிசை மாற்று வாரியத்தின்கீழ், 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ரூ. 21 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் அந்த குடியிருப்புப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் சென்று கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தாா்.

பவானி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால், பவானி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றம் குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, கொடிவேரி அணையில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.