ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து 11,833 கன அடியாக அதிகரிப்பு

பில்லூா் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 11,833 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:21 pm

பில்லூா் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 11,833 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அவலாஞ்சி, நடுவட்டம், அப்பா்பவானி ஆகிய வனப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூா் அணைக்கு வந்து சோ்ந்தது. இதனால், பில்லூா் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியாதல் அணைக்கு வரும் உபரிநீரான 14 ஆயிரம் கன அடி நீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த உபரிநீா் வியாழக்கிழமை பவானிசாகா் அணைக்கு வந்து சோ்ந்ததால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 11,833 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்ட உயரம் ஒரே நாளில் 1 அடி உயா்ந்து 90.27 அடியாக உள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.27 அடி, நீா்வரத்து 11,833 கனஅடி, அணையில் இருந்து பாசனத்துக்கு 1000 அடி நீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 21.76 அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.