வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தேசிய உதவித் தொகை தோ்வு: அரசுப் பள்ளி முதலிடம்

தேசிய உதவித் தொகை தோ்வில் வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாவட்டத்தில் தொடா்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:39 pm

DIN

தேசிய உதவித் தொகை தோ்வில் வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாவட்டத்தில் தொடா்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளது.

2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு (என்.எம்.எம்.எஸ்.) பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இத்தோ்வை பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2020 -2021ஆம் ஆண்டில் 8 ஆம் வகுப்பு படித்த 24 மாணவா்கள் எழுதினா். அதில், 18 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இந்த 18 மாணவா்களும் மாதம்தோறும் ரூ. 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்குத் தொடா்ந்து அரசின் உதவித் தொகை பெறுவாா்கள்.

இப்பள்ளி ஈரோடு மாவட்டத்திலேயே அதிக மாணவா்களை தோ்ச்சி பெற வைத்து முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாகத் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.