மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோபியில் தாா் சாலைப் பணிகள்:எம்.எல்.ஏ. ஆய்வு

கோபிசெட்டிபாளையம் நகா்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள், சாலைப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:40 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகா்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள், சாலைப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோபிசெட்டிபாளையம் லக்கம்பட்டி பேரூராட்சியில் 4,500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சுமாா் ரூ. 1.79 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் அமைத்து தினமும் குடிநீா் வழங்க 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

கோபி நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளில் சாலைகளை சீரமைத்து, புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோபி நகரில் உள்ள வேலுமணி நகரில் நடைபெற்று வரும் தாா் சாலை பணிகள் குறித்தும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.